Thursday, January 21, 2010

சில எண்ண சிதறல்கள்

விடுதலை பெறுவது சிரமமல்ல - சிறைபட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து விட்டால்!

ஆமை புகுந்த வீடு உருப்படாது என்று கூறுகிறார்கள்! உண்மையில் கல்லாமை, அறியாமை, பொறாமை போன்ற ஆமைகள் புகுந்த வீடு தான் உருப்படாது! உண்மையான ஆமை ஒன்றுமறியா விலங்கு தன தரித்திரத்தை ஆமை மீது திணிப்பது மனிதன் தனக்கு போட்டுக்கொள்ளும் விலங்கு!


சிலந்தியின் பலம் இரை கிடைத்த பின்னும் நிதானம்!
சிங்கத்தின் பலம் இரை கிடைத்த பின் வேகம்!

விழிப்பு, காலைக்கடன், பரபரப்புடன் வீட்டு வேலைகள், அலுவலகம் செல்தல், அரைத்த மாவையே மீண்டும் அரைத்தல், மதிய உணவு, சிறு இளைப்பாரluக்குபின் மீண்டும் அரைத்த மாவு, வீடு திரும்பல், மீதி வீட்டு வேலைகள், இரவு உணவு தூக்கம்! மீண்டும் மறுநாள் விழிப்பு, .........
இதுதான் வாழ்க்கையா

நம்பிக்கை- ஒரு சின்ன செடி!
நம்மை கேலி பேசும் ஆட்டு கூட்டம் அதை மேய்ந்து நாசமாக்கி விடாமல் இருக்க வேண்டுமானால் நாம் தளர்ந்து விடாது இருக்க வேண்டும்
அந்த செடி வளர்ந்து விருட்சமாகிவிட்டால் இந்த ஆட்டுக்கூட்டம் அந்த நிழலில் ஒதுங்க ஓடோடி வரும்!

4 comments:

  1. //நம்பிக்கை- ஒரு சின்ன செடி!
    நம்மை கேலி பேசும் ஆட்டு கூட்டம் அதை மேய்ந்து நாசமாக்கி விடாமல் இருக்க வேண்டுமானால் நாம் தளர்ந்து விடாது இருக்க வேண்டும்
    அந்த செடி வளர்ந்து விருட்சமாகிவிட்டால் இந்த ஆட்டுக்கூட்டம் அந்த நிழலில் ஒதுங்க ஓடோடி வரும்!
    //

    இதை, இதைத் தானே நான் எழுதியிருக்கேன், இங்கே பாருங்க....http://ulagamahauthamar.blogspot.com/2010/01/blog-post_20.html

    ReplyDelete
  2. //ஆமை புகுந்த வீடு உருப்படாது என்று கூறுகிறார்கள்! உண்மையில் கல்லாமை, அறியாமை, பொறாமை போன்ற ஆமைகள் புகுந்த வீடு தன உருப்படாது! //

    well said !

    ReplyDelete
  3. இதை, இதைத் தானே நான் எழுதியிருக்கேன், இங்கே பாருங்க....http://ulagamahauthamar.blogspot.com/2010/01/blog-post_20.ஹ்த்ம்ல்

    // கரெக்ட்தான் சார். அதை படிச்சதுக்கப்புறம்தான் இந்த கற்பனையே வந்தது. என்னை எழுத தூண்டியதுக்கு நன்றி.

    ReplyDelete
  4. maddy73 said...
    //ஆமை புகுந்த வீடு உருப்படாது என்று கூறுகிறார்கள்! உண்மையில் கல்லாமை, அறியாமை, பொறாமை போன்ற ஆமைகள் புகுந்த வீடு தன உருப்படாது! //

    well said !

    // ரொம்ப நன்றி சார். உங்கள் வருகை என்னை மகிழ வைத்தது.

    ReplyDelete