Monday, March 8, 2010

nithyanandavum ranjithavum

சிலருக்கு திடீர்னு சமுதாயத்தை தன் பக்கம் திரும்ப வைக்கணும்னு ஆசை வந்துடும் எதாவது வீடியோவை செய்தியா விடுவாங்க. இன்னைக்கு அறிவியல் வளர்ந்துட்டதால நம்மால ரஞ்சிதா வீடியோவை பாக்க முடிஞ்சது. ஆனா அன்னைக்கு இதே அறிவியல் வளர்ந்திருந்தா நம்மால விஜயகுமாரியோட வீடியோவையே பாத்திருக்க முடியும்னு எனக்கு தோணுது. சரி. என்ன பண்றது? ஒரு வாரம் இந்த செய்தியை பத்திரிகைகள்மெல்லட்டும்

Thursday, January 21, 2010

சில எண்ண சிதறல்கள்

விடுதலை பெறுவது சிரமமல்ல - சிறைபட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து விட்டால்!

ஆமை புகுந்த வீடு உருப்படாது என்று கூறுகிறார்கள்! உண்மையில் கல்லாமை, அறியாமை, பொறாமை போன்ற ஆமைகள் புகுந்த வீடு தான் உருப்படாது! உண்மையான ஆமை ஒன்றுமறியா விலங்கு தன தரித்திரத்தை ஆமை மீது திணிப்பது மனிதன் தனக்கு போட்டுக்கொள்ளும் விலங்கு!


சிலந்தியின் பலம் இரை கிடைத்த பின்னும் நிதானம்!
சிங்கத்தின் பலம் இரை கிடைத்த பின் வேகம்!

விழிப்பு, காலைக்கடன், பரபரப்புடன் வீட்டு வேலைகள், அலுவலகம் செல்தல், அரைத்த மாவையே மீண்டும் அரைத்தல், மதிய உணவு, சிறு இளைப்பாரluக்குபின் மீண்டும் அரைத்த மாவு, வீடு திரும்பல், மீதி வீட்டு வேலைகள், இரவு உணவு தூக்கம்! மீண்டும் மறுநாள் விழிப்பு, .........
இதுதான் வாழ்க்கையா

நம்பிக்கை- ஒரு சின்ன செடி!
நம்மை கேலி பேசும் ஆட்டு கூட்டம் அதை மேய்ந்து நாசமாக்கி விடாமல் இருக்க வேண்டுமானால் நாம் தளர்ந்து விடாது இருக்க வேண்டும்
அந்த செடி வளர்ந்து விருட்சமாகிவிட்டால் இந்த ஆட்டுக்கூட்டம் அந்த நிழலில் ஒதுங்க ஓடோடி வரும்!

Monday, January 18, 2010

ஒரு சின்ன சந்தேகம்

சில தலைவர்கள் பல துறைகளில் விற்பன்னர்களாகி இருப்பார்கள். ஆனால் அவர்களுடைய வாரிசுகள் மட்டும் எல்லோரும் அரசியலில் மட்டும் தான் சாதிப்பார்கள். தலைவர்களோ, சினிமா துறையிலும், இலக்கியத்துறையிலும் மிகபெரிய சாதனை படைத்திருப்பார்கள். ஆனால் அந்த துறையில் இவர்களுக்கு வாரிசுகள் இருக்க மாட்டார்கள். இது ஏன்?

தமிழ் புத்தாண்டு

ஜனவரி மாதம் பொங்கல் அன்று தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொல்வது என்பது பேஷன் ஆகிவிட்டது! ஆனால் எனக்கு என்னவோ இதில் உடன்பாடு இல்லை. அன்று தமிழில் விக்ருதி ஆண்டு பிறந்ததாக இவர்கள் எழுதுவதும் இல்லை. இவர்களுக்கு தமிழ் ஆண்டுகள் எத்தனை என்பதும் என்னென்ன என்பதும் தெரியுமா என்றும் எனக்கு தெரியவில்லை! இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் என்று சொல்லிவிட்டு மீண்டும் காலேண்டரிலும் தங்கள் சேனல்களிலும் மட்டும் விரோதி ஆண்டு என்று எழுதிக்கொள்வது யாரை ஏமாற்ற?

Thursday, December 31, 2009

new year

ஒரு புத்தாண்டு பிறக்கும் போது அன்றைய தினம் மட்டும் வாழ்த்து சொல்லிவிட்டு ஹாப்பி நியூ இயர் என்பது என்ன ஞாயம் meethi 364 naatkalum நியூ இயர் illaiya?

channel

இப்போதெல்லாம் தொலைக்காட்சி சேனல்களில் தமிழ் பேசுவது பாமரத்தனம் என்றாகிவிட்டது. தமிழை ஒதுக்குதல் நல்ல மேதாவித்தனம் என்றாகிவிட்டது.

Wednesday, December 30, 2009

சாலை விதிகள்

சாலைகளில் வாகன வோட்டிகள் சிக்னலில் கடைபிடிக்கும் முறைகளை பார்க்கும்போது எனக்கு கோபம் கோபமாக வருகிறது. சிகப்பு விளக்கு விழுந்த பின்னும் தற்குறி போல் கடந்து செல்வதும் வரும் வழியில் போவதும் போகும் வழியில் வருவதும் இழுத்து வைச்சு நாலு அறை விடலாமான்னு இருக்கு. என்ன அவசரம்? கொள்ளையா போகுது? இதுக்கா நாம படிச்சோம்? அப்பறம் எதுக்கு சிக்னல்? அதே போல எல்லா வண்டியும் நிக்கும் போது இவங்க மட்டும் எதிர் வண்டி பாதைல போய் முன்னாடி நின்னுக்கறது! ஞாயமா? எப்ப இவங்க எல்லாம் திருந்துவாங்க?